Tittle
TRB TET PAPER I, II & BEO Combined CLASS with TEST BATCH - 2025 க்கான விதிமுறைகள் :
இந்த பயிற்சிக்கான அணி (THIS BATCH ) 2025 ஆகஸ்ட் 24 முதல் நவம்பர் 15 வரை நடைபெறும்.
வகுப்பு பற்றிய விவரங்கள் :
* மாணவர்கள் கடினமாக உணரும் அதே சமயம் வெற்றியினை தீர்மானிக்கக்கூடிய Psychology, English , Maths பாடங்களுக்கு மட்டும் வார நாட்களில் இணையவழி வகுப்பு நடைபெறும்.
* Psychology, English , Maths பாடங்களுக்கு வைகறையின் தனித்துவமான குறிப்புகள் மற்றும் புத்தகம் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
* தேர்வுக்கு குறுகிய கால கட்டமே இருப்பதால் தமிழ், அறிவியல், சமூக அறிவியல், பாடப்பகுதிகளுக்கு வகுப்புகள் ஏதும் நடைபெறாது. ( மாறாக TRB யின் பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களில் இருந்து சிறிது சிறிதாக பிரித்து வாராந்திரத் தேர்வு மட்டும் நடைபெறும் )
* வாரத்தில் ஒரு சில நாட்களில் மட்டும் MICROSOFT TEAMS APP வழியாக அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை LIVE ஆக மட்டும் வகுப்பு நடைபெறும். (இந்த நேரம் மாறுதலுக்கு உட்பட்டது ). RECORDED CLASS NOT AVAILABALE.
* இதற்காக முந்தைய வாரங்களிலேயே தங்களுக்கு உரிய Material கள் Courier வழியாக அனுப்பி வைக்கப்படும்.
* மாணவர்கள் வகுப்பின் போது இப்பாடக்குறிப்புகளை கட்டாயம் கையில் வைத்து இருக்கவேண்டும்.
* இணைய வழி வகுப்பிற்கான இணைப்பு (Meeting link ) வகுப்புக்கு முன்னதாக Whatsapp குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும். மாணவர்கள் அந்த லிங்க்கை பயன்படுத்தி தங்களின் ROLL NUMBER மற்றும் NAME குறிப்பிட்டு Login செய்ய வேண்டும். ஒவ்வொரு நாள் வகுப்பிலும் கட்டாயம் ATTANDANCE எடுக்கப்படும். வகுப்புகளில் தொடர்ச்சியாக கலந்து கொள்ளாத மாணவர்கள் பயிற்சியில் தொடர அனுமதி இல்லை.
* ஒவ்வொரு பாடக்குறிப்புகளும் தங்களின் வெற்றிக்காக வைகறையால் அர்ப்பணிப்புடன் உருவாக்கப்பட்டு வழங்கப்படுவதாகும். இவற்றை நகல் எடுப்பது வேறு நபர்களுக்கு பகிருவது போன்ற ஒழுங்கீனமான திருட்டு செயல்களினால் அர்ப்பணிப்புடன் பல்வேறு சூழல்களுக்கு இடையே கடினமாக எங்களை நம்பி படித்துவரும் ஏதேனும் ஒரு மாணவரின் வேலை வாய்ப்பு பறி போக வாய்ப்புண்டு. அத்தகைய அறம் பிறழ்ந்த செயல்களை செய்யும் நபர்கள் பயிற்சியில் இணைய வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
* வைகறையின் பாடக்குறிப்புகளை நீங்கள் முறையாக பயன்படுத்துகிறீர்களா இல்லை வாங்கி மட்டும் வைத்துள்ளீர்களா என அவ்வப்போது பரிசோதனை செய்யப்படும். தேர்வில் முறையான மதிப்பெண் பெறாத மாணவர்களுக்கு, வகுப்பில் கலந்து கொள்ளாதவர்களுக்கு அடுத்தடுத்த Material வழங்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
வாராந்திர தேர்வு பற்றிய விவரங்கள் :
*ஆகஸ்ட் 24 முதல் ஒவ்வொரு வாரமும் TRB யின் பாடத்திட்டத்தில் உள்ள அனைத்து தலைப்புகளையும் உள்ளடக்கிய 150 வினாக்களைக் கொண்ட தேர்வு OMR sheet ஐ கொண்டு எழுதும் வகையில் நடைபெறும்.
*மாணவர்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை நாளில் தேர்வினை எழுதிக் கொள்ள முடியும். (சில நேரங்களில் மாறுதலுக்கு உட்பட்டது )
*இணையவழியில் தேர்வு எழுதுவதற்கான நேரம் 2 மணி 30 நிமிடங்கள் ஆகும்.
* மாதிரி OMR Sheet நமது இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வெழுதும் முன் கட்டாயம் அனைவரும் Print out எடுத்து வைத்து இருக்கவேண்டும். தேர்வின் போது வைகறை website பக்கத்தில் காட்டப்படும் வினாத்தாளினை pdf வடிவில் பார்த்து கொண்டு OMR யில் Shade செய்யவேண்டும்.
* மொத்தம் 11 வாராந்திரத் தேர்வுகள் மற்றும் ஒரு மாதிரித் தேர்வு, நமது www.vaigaraitnpsccoachingcentre.com என்ற இணைய தளத்தின் வழியே நடைபெறும்.
* PAPER 1 க்கான வாராந்திரத் தேர்வில் தமிழ், Psychology, English , Maths, EVS பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள் இடம் பெரும்.
* PAPER 2 (SCIENCE )க்கான வாராந்திரத் தேர்வில் தமிழ், Psychology, English , Maths, science பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள் இடம் பெறும்.
* PAPER 2 (ARTS) க்கான வாராந்திரத் தேர்வில் தமிழ், Psychology, English , Maths, பாடங்களில் இருந்து தலா 30 கேள்விகள், Social பாடத்திலிருந்து 60 கேள்விகள் இடம் பெறும்.
* BEO வுக்கான தேர்வில் தமிழ், Psychology, English , Maths, science, Social, Current Affairs பாடங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும்.
* எனவே வாராந்திரத் தேர்வுக்கு படிக்கும் முன்னர் அனைத்து ஆசிரிய பெருமக்களும் தமிழ், English , Maths, science, Social சமச்சீர் புத்தகங்களை [ paper 1 (1st - 10th), paper 2 ( 6th - 12th ), BEO (6th - 12th) ] கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் ஒவ்வொரு வார பாடங்களையும் முறையாக படிக்க இயலும்.
* தேர்வுக்கு குறுகிய காலமே இருப்பதால் ஒட்டு மொத்த பாடத்திட்டத்தையும் 11 வாரங்களுக்கு மட்டும் பிரித்து தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். எனவே வெற்றி பெற வேண்டுமெனில் நாளொன்றுக்கு சராசரியாக 10 முதல் 12 மணி நேரம் படித்தால் மட்டுமே பாடங்களை படித்த முடிக்க இயலும் என்பதை நினைவில் கொள்க.
*அந்தந்த வாரத்திற்குரிய தேர்விற்க்கான SYLLABUS முந்தைய வாரத்தேர்வு முடிந்தவுடன் Whatsapp குழுவில் அனுப்பிவைக்கப்படும். அல்லது தங்களின் இணையதளப் பக்கத்தில் பதிவேற்றப்படும்.
* தேர்வினை திறன்பேசி ( smart phone), மடிக்கணினி (Laptop), கையடக்க கணினி (Tablet), PC (personal computer ) வழியாக எழுதி கொள்ள முடியும். smart phoneஐ விட கணினியைப் பார்த்து எழுதுவது எளிதாக இருக்கும்.
* ஒவ்வொரு வாரத்தேர்வு எழுதி முடித்தவுடன் விரிவான விடைகளைக் கொண்ட ANSWER KEY யைக் கொண்டு தாங்கள் எழுதிய OMR ஐ மாணவர்கள் திருத்திக் கொள்ளவேண்டும். பின்னர் தாங்கள் சரியாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கையை மட்டும் அதற்க்கென கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பதிவிடவேண்டும்.
* ஒருமுறை தேர்வு எழுதி முடித்துவிட்டால் தங்களால் மீண்டும் அந்த வினாத்தாளினை பார்க்க இயலாது. அதே சமயம் விரிவான விடைகளைக் கொண்ட ANSWER KEY ஐ 24 மணி நேரம் மட்டும் மாணவர்கள் பார்த்துக் கொள்ளும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கடைசியாக மாணவர்களின் திருப்புதலுக்கு பயன்பெறும் வகையில் வினா மற்றும் விடை மட்டும் OPTION இல்லாமல் Material வடிவில் PDF ஆக பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
* ஒவ்வொரு வாரமும் நீங்கள் எழுதிய OMR Sheet னை பத்திரமாக வைத்து இருக்க வேண்டும். OMR Sheet னை வைகறை அவ்வப்போது ஆய்வுக்கு உட்படுத்தும். அப்போது தேர்வு எழுதாமல் தவறாக மதிப்பெண்ணை பதிவிடுவது கண்டறியப் பட்டால் பயிற்சியை விட்டு நீக்கப்படுவீர்கள்.
* தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் கட்டாயம் தேர்வினை எழுதிட வேண்டும். தொடர்ச்சியாக 2 தேர்வுகளுக்கு மேல் எழுதாமல் இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் உறுதியாக பயிற்சியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். வெற்றிக்கு சீரான பயிற்சி அவசியம்.
* தங்களுக்கு உள்ள பணிசூழல், குடும்ப சூழல் போன்றவற்றை காரணம் காட்டி முறையாக பயிற்சியை மேற்கொள்ளாமல் இருப்பது தங்களுக்கான வாய்ப்பினை தவற விடக்காரணமாக இருந்துவிடக்கூடாது. முயன்றால் முடியாது என்று எதுவுமில்லை.
*வைகறை நிர்ணயித்துள்ள ஒவ்வொரு தேர்வுக்கான வழிமுறைகளும், விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் தங்களின் அரசுப்பணி இலக்கை அடைவதற்காக அக்கறையுடனும், பொறுப்புடனும், கண்டிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்க.
*இங்கு நடைபெறும் வகுப்பு மற்றும் தேர்வு முறை தமிழ் வழியில் மட்டுமே (TAMIL MEDIUM ONLY) இருக்கும். ஆங்கில வழியில் கட்டாயம் இருக்காது. அதையும் மீறி ENGLISH MEDIUM மாணவர்கள் வைகறையின் தரமான வழிகாட்டுதலை விரும்பினால் பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். ஆனால் இடையில் மொழியை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது எனக்கூறி பயிற்சியில் இருந்து பகுதியுடன் விலகினால் எக்காரணம் கொண்டும் தேர்வுக்கட்டணம் திரும்ப பெறுதல் இயலாது.
*பயிற்சியில் இணைந்த பிறகு பிற காரணங்களுக்காக பயிற்சியிலிருந்து விலக நேரிட்டால் தாங்கள் செலுத்திய தேர்வுக் கட்டணம் திருப்பி வழங்கவோ அல்லது வேறு பயிற்சி அல்லது நேரடி வகுப்புக்கு மாற்றித்தரவோ இயலாது என்பதை உறுதியாக கவனத்தில் கொள்ளவும். பின்னர் இது தொடர்பான எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது.
* வைகறை ONLINE CLASS மற்றும் ONLINE TEST பயிற்சியில் இணைந்துள்ள மாணவர்கள் எக்காரணம் கொண்டும் இப்பயிற்சியின் போது இடையிலேயே Direct TEST க்கு மாற்றிவிடுமாறு கூறக்கூடாது. அவ்வாறு உறுதியாக செய்ய முடியாது. எனவே நன்கு யோசித்து உங்களுக்கான பயிற்சி முறையை தேர்ந்தெடுக்கவும்.
மேற்காணும் விதி முறைகள் மற்றும் வழி முறைகளை கட்டாயம் தெளிவான மனநிலையில் படித்து அனைத்திற்கும் உடன் பட்டால் மட்டும் பயிற்சிக்கான கட்டணம் (ONLINE LIVE CLASS + TEST + MATERIAL ) ரூ.5000 , இணைய வழி சேவை மற்றும் கொரியர் கட்டணம் ரூ.450 ஆக மொத்தம் ரூ.5450 (ஒரே தவணையாக) செலுத்தி பயிற்சியில் இணைந்து கொள்ளலாம்.
நிச்சயம்
"வைகறையில் விடியும் உங்கள் வாழ்க்கை"