Tittle
Plan conditons
2026 - Group II, IIA & IV Common CLASS BATCH-க்கான விதிமுறைகள்
இந்த இணையவழி பயிற்சி வகுப்பு (Online Class Batch) அணி 2026 ஜனவரி தொடங்கி ஜூன் 2026 வரை மட்டுமே நடைபெறும்.
பயிற்சி வகுப்பு பற்றிய விவரங்கள்
o தினசரி அல்லது ஒரு சில வார நாட்களில் அதிகாலை 4.30 மணி முதல் காலை 7.30 மணி வரை அல்லது மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை (நேரம் மாறுதலுக்கு உட்பட்டது).இணையவழியில் Microsoft Teams App மூலம் வகுப்புகள் நடைபெறும்.
o இந்த பயிற்சி வகுப்பிற்கு தேவையான புத்தகங்கள் மற்றும் முக்கிய தகவல்களை மட்டும் கொண்ட அச்சடிக்கப்பட்ட பாடக்குறிப்புகள் (Books and Printed Materials) தங்களுடைய முகவரிக்கு தனியார் அஞ்சல் (private Courier) வழியாக 2 அல்லது 3 முறை அனுப்பி வைக்கப்படும்.
{பாடக்குறிப்புகள் 3 முறை அனுப்பப்படக் காரணம், முதல் முறை அனுப்பிய பிறகு நீங்கள் வகுப்பு மற்றும் தேர்வுகளில் கலந்து கொள்ளாமல் இருந்தால் அடுத்தடுத்த குறிப்புகள் தங்களுக்கு அனுப்பி வைக்கப்படாது}
o பயிற்சி மையத்தால் வழங்கப்படும் பாடக்குறிப்புகள் மற்றும் புத்தகங்களை தாங்கள் இணையவழி வகுப்பில் கலந்து கொள்ளும் போது கட்டாயம் கையில் வைத்திருக்க வேண்டும். அப்போது தான் பாடம் நடத்தவும் புரிந்து கொள்ளவும் எளிதாக இருக்கும்.
o பயிற்சி மையத்தால் வழங்கப்படும் பாடக்குறிப்புகள் மற்றும் புத்தகங்கள், வகுப்பில் கொடுக்கப்படும் கூடுதல் தகவல்கள் தமிழ்நாடு அரசு நடத்தக்கூடிய தேர்வுகளை மாணவர்கள் எளிதாக அணுகி வெற்றி பெறுவதற்காக சிறப்பான முறையில் தொகுக்கப்பட்டுள்ளது. இப்பாடக் குறிப்புகளை முறைகேடாக நகல் (Xerox) எடுத்தல், புகைப்படம் எடுத்து பகிர்தல், மாற்றி மறு பிரதியெடுத்தல் போன்றவற்றை செய்யும் நபர்கள் மீது காப்புரிமை சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
o தேர்வில் ஒரே வினா அல்லது வினாவில் வாய்ப்பை இழந்தவர் பல ஆயிரம் பேர் உள்ளனர். ஒரே மதிப்பெண் எடுத்த போதும் காலிப்பணியிடங்களின் அளவைப் பொறுத்து அரசு வேலை கிடைத்தவரும், அரசு வேலை கிடைக்காதவரும் இங்கு பலர் உள்ளனர். எனவே அத்தகைய வெற்றியைத் தீர்மானிக்கும் நோக்கில் பயிற்சி மையம் மாணவர்களுக்காக தனித்துவமாக தொகுத்து வழங்கியப் பாடக்குறிப்புகள் நன்றாக படிக்கும் வெளிநபர்களுக்கு முறைகேடாக வழங்கப்படும் பட்சத்தில் இங்கு படிக்கும் யாரோ ஒரு மாணவர் தனக்கான வாய்ப்பை இழக்கிறார் என்பதை மறவாதீர்.
o ஒவ்வொரு நாளும் இணையவழி பயிற்சி வகுப்பில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும். தவிர்க்கவே முடியாத சூழலில் விடுப்பு எடுக்கத் தேவை இருந்தால் வாட்செப் குழுவில் தாங்கள் வரஇயலாத காரணத்தை பதிவிட வேண்டும். பதிவிடவில்லையெனில் பயிற்சியில் நீடிக்க இயலாது. வகுப்பில் கலந்து கொள்பவர்கள் தவறாது தங்களின் Roll number மற்றும் Name பதிவிட்டே வகுப்பில் கலந்து கொள்ள வேண்டும். பயிற்சி மையம் சார்பிலும் வருகைப் பதிவு தினசரி கட்டாயம் எடுக்கப்படும்.
o இணையவழி வகுப்பில் Join செய்து விட்டு பயிற்றுநர் தங்களின் Roll number மற்றும் பெயர் சொல்லி ஏதாவது கேட்கும் போது பதில் சொல்லாமல் இருப்பவர்களின் Roll number குறிக்கப்பட்டு அடுத்து வரும் காலங்களில் வகுப்பில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள். (பதிவுக்காக வகுப்பில் இணைந்து விட்டு வேறு பணிகளை பார்க்க சிலர் சென்று விடுவதால் இம்முடிவு)
o இணையவழி வகுப்புகளை வகுப்பு நடைபெறும் நாளில் மட்டுமே பார்த்து பயன்படுத்திக் கொள்ள இயலும், அட்டவணையில் (schedule) குறிப்பிட்ட நாளைத் தவிர வேறொரு நாளில் அல்லது அதே வகுப்பு மீண்டும் மறு ஒளிப்பரப்பு செய்ய இயலாது. எனவே ஒவ்வொரு நாளும் வகுப்பில் தவறாது கலந்து கொண்டு பயன்பெறுவது தங்களின் பொறுப்பாகும்
o இதற்காக அனைவரும் Unlimited Data வை Recharge செய்து வைத்திருப்பதும் அல்லது தடையில்லா wifi வசதியைப் பெற்றிருப்பதும், வகுப்பில் கலந்து கொள்ளும் போது Network coverage உள்ள பகுதியில் இருப்பதும் மிக மிக அவசியமானது. எனவே இவற்றை எல்லாம் உறுதி செய்து விட்டு பயிற்சியில் இணைந்து முழுமையாக பயன்பெறுமாறு வேண்டுகிறோம்.
இணையவழித் தேர்வு பற்றிய விவரங்கள் :
o புதிதாக படிப்பவர்களும் எளிதாக பாடத்திட்டத்தை படித்து முடிக்கும் வகையில் அடிக்கடி REVISON உடன், வார நாட்களில் இணையவழியில் நடத்தப்படும் பாடங்களிலிருந்து வார இறுதியில் 200 வினாக்களுக்கு தேர்வு நடைபெறும். ( இதில் அதிக கேள்விகள் கேட்கப்படும் பாடங்கள் உட்பட அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது)
o வைகறை புத்தகங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் என்பவை TNPSC பாடத்திட்டத்தின்படி குறுகிய காலத்தில் படிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்ட முக்கிய தகவல்களை மட்டும் உள்ளடக்கியது. 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ், அறிவியல், சமூக அறிவியல், பாட சமச்சீர் புத்தகங்களை கையில் வைத்துக் கொண்டு படிப்பது சிறந்த அணுகுமுறையாகும்.
o வைகறையில் வாராந்திரத் தேர்வுகளுக்கான உத்தேச முழுத் தேர்வு கால அட்டவணையையும், இது தவிர ஒவ்வொரு வாரமும் அந்த வாரத் தேர்வுக்குரிய விரிவான where to study யையும் நீங்கள் பார்த்துக் கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதனைச் சரியாக குறித்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.
o தேர்வினை திறன்பேசி (Smartphone), மடிக்கணினி (Laptop), கையடக்க கணினி (Tablet), PC (Personal Computer) வழியாக எழுதிக் கொள்ள முடியும்.
TNPSC யில் பெரும்பான்மையான தேர்வுகள் OMR வழியில் நடத்தப்படுவதால் வைகறையும் இத்தேர்வுகளை OMR வழியாக நடத்துகிறது.
இதற்காக TNPSC ஆல் வழங்கப்பட்டுள்ள மாதிரி OMR தாளினை தேர்வர்கள் தேவையான அளவு தேர்வு எழுதத் தொடங்குவதற்கு முன் Printout எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான link அல்லது Pdf வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு முறையில் வினாத்தாளினை Pdf வடிவில் கணினியில் பார்த்துக் கொண்டு நீங்கள் ஏற்கனவே Print out எடுத்து வைத்துள்ள OMR-இல் கருப்பு நிற பேனா மூலம் மட்டுமே Shade செய்ய வேண்டும். தேர்வு நேரம் முடிந்தவுடன் காண்பிக்கப்படும் விடைக்குறிப்புகள் (ம) விளக்கங்களைக் கொண்டு OMR விடைத்தாளினைத் திருத்திக் கொள்ள வேண்டும்
இணையவழியில் தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 கேள்விக்கு (2 மணி 30 நிமிடங்கள்) அனைத்து விடைகளையும் கணக்கிட்டு OMR னை முழுமையாக இதற்குள் பூர்த்தி செய்வதற்கான நேரமும் இதில் அடங்கும்.
OMR ல் தேர்வு எழுதி முடித்தவுடன் தவறாமல் TNPSC தேர்வு போன்று A, B, C, D ஆகிய வரிசைகளை சரியாகக் கணக்கிட்டு அதற்கென வழங்கப்பட்டுள்ள கட்டத்தில் Shade செய்ய வேண்டும். தவறாது கையெழுத்து மற்றும் கைரேகையும் இட வேண்டும்.
தேர்வினை எழுதி முடித்தவுடன் அந்தக் குறிப்பிட்ட வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் (Answer key) ஒரு நாள் (24 மணி நேரம்) மட்டுமே உங்கள் இணையதளப் பக்கத்தில் பார்க்க இயலும்.
தேர்வு தொடர்பான விரிவான விளக்கங்களை Audio clip வடிவில் பதிவு செய்துள்ளோம். நீங்கள் அதனை Play செய்வதன் மூலம் தேவைப்படும் குறிப்புகள், விளக்கங்களை கேட்டுக் குறித்துக் கொள்ள முடியும்.
மேலும் வினா மற்றும் விடையை (Answer Key Pdf) மட்டும் Material வடிவில் (Download) பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
மனசாட்சிக்கு விரோதமில்லாமல் OMR யை சரியாகத் திருத்தி நீங்கள் சரியாக விடையளித்துள்ள மொத்த கேள்விகளின் எண்ணிக்கையை மட்டும் அதற்கென வழங்கப்பட்டுள்ள இடத்தில் பதிவிட வேண்டும்.
நீங்கள் தேர்வு எழுதும் OMR எப்போது வேண்டுமானாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எனவே ஒவ்வொரு OMR யும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தேர்வு எழுதாமல் தவறான மதிப்பெண்ணைப் பதிவிடுவது கண்டறியப்பட்டால் பயிற்சியை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் கட்டாயம் தேர்வினை எழுதி இருக்க வேண்டும். தொடர்ச்சியாக தேர்வினை எழுதாமல் இருப்பவர்கள் (2 தேர்வுகளுக்கு மேல்) கண்டறியப்பட்டால் உறுதியாக பயிற்சியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். வெற்றிக்கு சீரான பயிற்சி அவசியம்.
பயிற்சியில் இணைந்த பிறகு பிறகாரணங்களுக்காக பயிற்சியிலிருந்து விலக நேரிட்டால் தாங்கள் செலுத்தியக் கட்டணம் திருப்பி வழங்கவோ அல்லது வேறு நேரடி அல்லது இணையவழி பயிற்சிக்கு மாற்றித்தரவோ இயலாது என்பதை கவனத்தில் கொள்க.
குறுகிய கால இடைவெளியில் பயிற்சி அளிக்க வேண்டி இருப்பதால் பாடத்திட்டத்தின் கடினத் தன்மையை தவிர்க்க இயலாது.
இந்த அணியில் வகுப்பு மற்றும் தேர்வு பயிற்சி அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே நடைபெறும்.. அதையும் மீறி ENGLISH MEDIUM மாணவர்கள் வைகறையின் தரமான வகுப்பு மற்றும் தேர்வினை விரும்பினால் அதெற்க்கென பிரேத்யமாக பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். ஆனால் இடையில் மொழியை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது எனக்கூறி பயிற்சியில் இருந்து பகுதியுடன் விலகினால் எக்காரணம் கொண்டும் பயிற்சி கட்டணம் திரும்ப பெறுதல் இயலாது.
வைகறை நிர்ணயித்துள்ள வகுப்பு மற்றும் தேர்வுக்கான வழிமுறைகளும், விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் தங்களின் அரசுப்பணி இலக்கை அடைவதற்காக அக்கறையுடனும், பொறுப்புடனும், கண்டிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்க.
கவனிக்க : இந்த அணி 2026 ஜனவரியில் தொடங்கி ஜூன் வரை (ஆறு மாதங்கள்) நடைபெறும். எனவே மாணவர்களின் நலன் கருதி பயிற்சிக்கான கட்டணம் இரண்டு முறை தனி தனியாக செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேற்காணும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டால் மட்டும் முதல் 3 (ஜனவரி - மார்ச்) மாதங்களுக்கான பயிற்சிக்கான கட்டணம் ரூ.3250 செலுத்தி பயிற்சியில் இணையவும். ஏப்ரல் - ஜூன் ஆன கட்டண விவரம் மார்ச் இறுதியில் தெரிவிக்கப்படும்.
நிச்சயம்
!வைகறையில் விடியும் உங்கள் வாழ்க்கை!!