Tittle
Plan conditons
2026 - Group II, IIA & IV Common TEST BATCH-க்கான விதிமுறைகள்
இந்த இணையவழி தேர்வு (Online TEST Batch) அணி ஜனவரி 2026 தொடங்கி ஜூன் 2026 வரை (தோராயமாக மொத்தம் 26 தேர்வுகள் ) மட்டுமே வாரந்தோறும் (பெரும்பாலும் ஞாயிறு அன்று ) நடைபெறும்.
இணையவழித் தேர்வு பற்றிய விவரங்கள் :
o புதிதாக படிப்பவர்களும் எளிதாக பாடத்திட்டத்தை படித்து முடிக்கும் வகையில் அடிக்கடி REVISON உடன், வார இறுதியில் 200 வினாக்களுக்கு தேர்வு நடைபெறும். ( இதில் அதிக கேள்விகள் கேட்கப்படும் பாடங்கள் உட்பட அனைத்து பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது)
இத்தேர்வு தமிழ் - 100, கணிதம் - 25, பொது அறிவு - 75 (அறிவியல் 15 + சமூக அறிவியல் 50 + நடப்பு நிகழ்வுகள் 10) என்ற எண்ணிக்கையில் மொத்தம் 200 வினாக்களுக்கு நடைபெறும்.
* TNPSC தேர்வுகளுக்கு முதல் முறையாக படிக்கும் மாணவர்கள் எடுத்தவுடன் தேர்வு அணியில் (TEST ONLY BATCH ) இணைந்து பயிற்சி பெறுவதை விட , ஒவ்வொரு பாடத்தையும் எவ்வாறு அணுகவேண்டும் என்ற அடிப்படை புரிதலுடன் வைகறை வழங்கும் class + Test + Material அணியில் இணைவதே சரியான முடிவாக இருக்கும், (இருந்த போதும் இவ்விடயத்தில் தங்களின் முடிவே இறுதியானது )
o இத்தேர்வில் கேட்கப்படும் வினாக்கள் பெரும்பான்மையாக புதிய மற்றும் பழைய 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள தமிழ், அறிவியல், சமூக அறிவியல், பாட சமச்சீர் புத்தகங்கள் மற்றும் சில வெளிப்பாடப் புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டு TNPSC நடத்தும் அனைத்து (தமிழ், பொதுஅறிவு, கணிதம்) பாடத்திட்டத்திலுள்ள தேர்வுகளையும் எதிர் கொள்ளும் வகையில் நடைபெறும். இதற்காக அனைத்து சமச்சீர் புத்தகங்களையும் படிக்கத் துவங்கும் முன் மாணவர்கள் கட்டாயம் கையில் வைத்து இருக்க வேண்டும்.
• கணிதப் பாடத்திற்கு மட்டும் வைகறை சிறப்பாக தீர்வுகளுடன் தொகுத்தளித்துள்ள வைகறை கணிதம் பாகம் 1, 2, 3 புத்தகங்களைத் தேவைப்படுவோர் நீங்கள் பயணிக்கும் வைகறை Whatsapp குழு வழியாக விவரங்களை கேட்டு தனியாக ரூ.1100 செலுத்தி (மூன்று பாகங்கள் மற்றும் COURIER கட்டணத்துடன் சேர்த்து) பெற்றுக் கொள்ள முடியும்.
• இது தவிர வைகறையின் நேரடி வகுப்புக்குரிய எந்த பாடக் குறிப்புகளும், வினாத்தாள்களும் Online Test Only batch ல் இணையும் மாணவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.
o வைகறையில் வாராந்திரத் தேர்வுகளுக்கான உத்தேச முழுத் தேர்வு கால அட்டவணையையும், இது தவிர ஒவ்வொரு வாரமும் அந்த வாரத் தேர்வுக்குரிய விரிவான where to study யையும் நீங்கள் பார்த்துக் கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இதனைச் சரியாக குறித்து வைத்துக் கொண்டு படிக்க வேண்டும்.
o தேர்வினை திறன்பேசி (Smartphone), மடிக்கணினி (Laptop), கையடக்க கணினி (Tablet), PC (Personal Computer) வழியாக எழுதிக் கொள்ள முடியும்.
TNPSC யில் பெரும்பான்மையான தேர்வுகள் OMR வழியில் நடத்தப்படுவதால் வைகறையும் இத்தேர்வுகளை OMR வழியாக நடத்துகிறது.
இதற்காக TNPSC ஆல் வழங்கப்பட்டுள்ள மாதிரி OMR தாளினை தேர்வர்கள் தேவையான அளவு தேர்வு எழுதத் தொடங்குவதற்கு முன் Printout எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கான link அல்லது Pdf வழங்கப்பட்டுள்ளது.
இத்தேர்வு முறையில் வினாத்தாளினை Pdf வடிவில் கணினியில் பார்த்துக் கொண்டு நீங்கள் ஏற்கனவே Print out எடுத்து வைத்துள்ள OMR-இல் கருப்பு நிற பேனா மூலம் மட்டுமே Shade செய்ய வேண்டும். தேர்வு நேரம் முடிந்தவுடன் காண்பிக்கப்படும் விடைக்குறிப்புகள் (ம) விளக்கங்களைக் கொண்டு OMR விடைத்தாளினைத் திருத்திக் கொள்ள வேண்டும்
இணையவழியில் தேர்வு எழுதுவதற்கான நேரம் 200 கேள்விக்கு (2 மணி 30 நிமிடங்கள்) அனைத்து விடைகளையும் கணக்கிட்டு OMR னை முழுமையாக இதற்குள் பூர்த்தி செய்வதற்கான நேரமும் இதில் அடங்கும்.
OMR ல் தேர்வு எழுதி முடித்தவுடன் தவறாமல் TNPSC தேர்வு போன்று A, B, C, D ஆகிய வரிசைகளை சரியாகக் கணக்கிட்டு அதற்கென வழங்கப்பட்டுள்ள கட்டத்தில் Shade செய்ய வேண்டும். தவறாது கையெழுத்து மற்றும் கைரேகையும் இட வேண்டும்.
தேர்வினை எழுதி முடித்தவுடன் அந்தக் குறிப்பிட்ட வினாத்தாளுக்கான விடைக்குறிப்புகள் (Answer key) ஒரு நாள் (24 மணி நேரம்) மட்டுமே உங்கள் இணையதளப் பக்கத்தில் பார்க்க இயலும்.
தேர்வு தொடர்பான விரிவான விளக்கங்களை Audio clip வடிவில் பதிவு செய்துள்ளோம். நீங்கள் அதனை Play செய்வதன் மூலம் தேவைப்படும் குறிப்புகள், விளக்கங்களை கேட்டுக் குறித்துக் கொள்ள முடியும்.
மேலும் வினா மற்றும் விடையை (Answer Key Pdf) மட்டும் Material வடிவில் (Download) பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.
மனசாட்சிக்கு விரோதமில்லாமல் OMR யை சரியாகத் திருத்தி நீங்கள் சரியாக விடையளித்துள்ள மொத்த கேள்விகளின் எண்ணிக்கையை மட்டும் அதற்கென வழங்கப்பட்டுள்ள இடத்தில் பதிவிட வேண்டும்.
நீங்கள் தேர்வு எழுதும் OMR எப்போது வேண்டுமானாலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். எனவே ஒவ்வொரு OMR யும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். தேர்வு எழுதாமல் தவறான மதிப்பெண்ணைப் பதிவிடுவது கண்டறியப்பட்டால் பயிற்சியை விட்டு வெளியேற்றப்படுவீர்கள்.
வினாத்தாள்களை SCREEN SHOT எடுப்பது , SCREEN RECORD செய்வது, PHOTO அல்லது VIDEO எடுப்பவர்களை நவீன தொழில் நுட்பத்தின் வாயிலாக கண்காணித்து வருகிறோம். முறைகேடுகளில் ஈடுபடுபட்டால் நிச்சயம் சட்டரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் கட்டாயம் தேர்வினை எழுதி இருக்க வேண்டும். தொடர்ச்சியாக தேர்வினை எழுதாமல் இருப்பவர்கள் (2 தேர்வுகளுக்கு மேல்) கண்டறியப்பட்டால் உறுதியாக பயிற்சியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள். வெற்றிக்கு சீரான பயிற்சி அவசியம்.
பயிற்சியில் இணைந்த பிறகு பிறகாரணங்களுக்காக பயிற்சியிலிருந்து விலக நேரிட்டால் தாங்கள் செலுத்தியக் கட்டணம் திருப்பி வழங்கவோ அல்லது வேறு நேரடி அல்லது இணையவழி பயிற்சிக்கு மாற்றித்தரவோ இயலாது என்பதை கவனத்தில் கொள்க. பின்னர் இது தொடர்பான எவ்வித கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்படாது.
குறுகிய கால இடைவெளியில் பயிற்சி அளிக்க வேண்டி இருப்பதால் பாடத்திட்டத்தின் கடினத் தன்மையை தவிர்க்க இயலாது. மேலும் நாளொன்றுக்கு 8 முதல் 10 மணி நேரம் ஒதுக்கி படிப்பது அவசியமாகும்.
இந்த அணியில் வகுப்பு மற்றும் தேர்வு பயிற்சி அனைத்தும் தமிழ் வழியில் மட்டுமே நடைபெறும்.. அதையும் மீறி ENGLISH MEDIUM மாணவர்கள் வைகறையின் தரமான தேர்வினை விரும்பினால் அதெற்க்கென பிரேத்யமாக பயிற்சியில் இணைந்து கொள்ளலாம். ஆனால் இடையில் மொழியை புரிந்து கொள்வது கடினமாக உள்ளது எனக்கூறி பயிற்சியில் இருந்து பகுதியுடன் விலகினால் எக்காரணம் கொண்டும் பயிற்சி கட்டணம் திரும்ப பெறுதல் இயலாது.
வைகறை நிர்ணயித்துள்ள வகுப்பு மற்றும் தேர்வுக்கான வழிமுறைகளும், விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் தங்களின் அரசுப்பணி இலக்கை அடைவதற்காக அக்கறையுடனும், பொறுப்புடனும், கண்டிப்புடனும் உருவாக்கப்பட்டுள்ளது. இதை சரியாகப் பயன்படுத்திக் கொள்க.
கவனிக்க : இந்த அணி 2026 ஜனவரியில் தொடங்கி ஜூன் வரை (ஆறு மாதங்கள்) நடைபெறும். எனவே மாணவர்களின் நலன் கருதி தேர்வுக்கான கட்டணம் இரண்டு முறை தனி தனியாக செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. மேற்காணும் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உடன்பட்டால் மட்டும் முதல் 3 (ஜனவரி - மார்ச்) மாதங்களுக்கான தேர்வுக்கான கட்டணம் ரூ.1850 செலுத்தி பயிற்சியில் இணையவும். ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கான கட்டண விவரம் மார்ச் இறுதியில் தெரிவிக்கப்படும்.
நிச்சயம்
!வைகறையில் விடியும் உங்கள் வாழ்க்கை!!